சம்பந்தப்பட்ட அனைவருக்கும்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 10 ஜூன் 2024 அன்று நடைபெறவுள்ள அய்யலூர் வாழ்வாதார திட்டத்தின் உள்ளூர் பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கான (Local Stakeholders Consultation Meeting) அழைப்பிதழ்

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில், அய்யலூர் வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பல்நோக்கு, பூர்வீக மரங்கள் நடப்பட்டு, அவற்றுடன் பல்வகை பயிர்கள் (பருப்பு வகைகள், தானியங்கள், காய்கறிகள், பூக்கள்), புதர்கள் மற்றும் காட்டு கிழங்குகளும் ஊடுபயிராக பயிரிடப்படும். மரங்களும் பயிர்களும் இணைந்த ஒரு வேளாண் காடு மாதிரியை நிறுவி, அதன் மூலம் 8,000 முதல் 10,000 சிறு விவசாயக் குடுங்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். பிற வகை வருமானம் ஈட்டும் திட்டங்களும் கூடுதலாக இத்திட்டத்தில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் விவசாயக் குடும்பங்களின் வருமானம் மட்டுமன்றி, அவர்களின் ஊட்டச்சத்து பன்முகத்தன்மை மற்றும் உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் மரங்களின் மூலம் குறைக்கப்படும் கரியமில மாசுபாட்டு குறைப்பின் மூலம், சான்றளிக்கப்ப்ட்ட கரியமில குறைப்பு நிதியும் (Certified carbon credits) பெறப்படும். இதற்காக, இத்திட்டம் மற்றும் அதன் நடவடிக்கைகளை Gold Standard  (https://www.goldstandard.org/) என்ற தரக்கட்டுப்பாட்டு அமைப்பில் பதிவு செய்யப்பட்டு, நிர்வாகம் செய்யப்படும்.

திட்டம் பற்றிய விளக்கவுரை (https://shorturl.at/egqwC) மற்றும் விரிவான தகவல்களை இந்த இணைப்பில் (https://shorturl.at/eghA9) நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

Livelihoods Carbon Fund 3 (LCF3) என்ற நிறுவனத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் நிலப்பரப்பில், இந்த பெரிய அளவிலான, நீண்ட கால வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தை SEEDS அறக்கட்டளை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பங்குதாரர்களுக்கு கூடுதல் விபரங்கள் அளிக்க, உள்ளூர் பங்குதாரர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள S.K.S ஶ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில், 10 ஜூன் 2024 அன்று (காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு பங்களிக்கக்கூடிய அமைப்பாக தங்களுடைய ஊராட்சி இருப்பதால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தங்களையும் தங்கள் ஊராட்சிமன்ற செயலாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் மேலான அலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்க விரும்புகிறேன்.

இக்கூட்டத்தில், திட்ட செயல்பாட்டின் மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக பலன் பெற உள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள், அவர்களின் அமைப்புகள், முக்கிய அரசுத்துறைகளின் அதிகாரிகள், தன்னார்வ நிறுவனங்கள், ஆய்வு மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவிலான பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, இத்திட்டத்தின் சாதக பாதகங்களைப் பற்றி, திட்டத்தை நிறைவேற்றும் மற்றும் ஆதரிக்கும் நிறுவனங்களுடன் விவாதிப்பார்கள்.

நிகழ்ச்சி நிரல்:

• பங்கேற்பாளர்கள் வரவேற்பு

• திட்டத்தைப் பற்றிய அறிமுக உரை

• திட்டக்கூறுகளை பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி

• திட்டத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை ஆய்வு செய்தல் (Safeguarding principles assessment)

• திட்டத்தின் நிலைத்தன்மை (Sustainability assessment) பற்றிய கலந்தாய்வு

• திட்ட மேற்பார்வை மற்றும் நிலைத்தன்மை குறியீடுகளைப் பற்றிய விளக்கம் (sustainable development indicators)

• திட்டத்தின் குறை தீர்ப்பு நடைமுறைகள் பற்றிய கருத்துக்கேட்பு

• நிகழ்ச்சி பற்றிய பங்காற்பாளர்களின் கருத்துக்களை கேட்டறிதல்

• நிகழ்ச்சி நிறைவு

ஒருவேளை இக்கூட்டத்தில் தாங்கள் நேரடியாக கலந்துகொள்ள இயலாவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூட்ட நேரலை இணைப்பு (https://shorturl.at/ktDQZ) மூலம் தாங்கள் இணைய வழியில் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள திட்ட விளக்க உரை மற்றும் கூறுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை, கூட்டத்திற்கு முன்பே அல்லது ஜூலை மாதம் 9 தேதி வரை, கீழ்கண்ட வழிகளில் எங்களுக்கு நீங்கள் தெரியப்படுத்தலாம்:

1. pd.alp@seedstrust.org, அல்லது anatarajan@livelihoods-venture.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் 2. 6383408155 என்ற உள்ளூர் கைப்பேசி எண்ணிற்கு தொலைபேசியில் அழைக்கலாம் 3. தங்கள் கருத்துக்களை, திட்ட இயக்குனர், SEEDS அறக்கட்டளை, H1/67, R.M. காலனி முதல் தெரு, திண்டுக்கல் – 624001 என்ற முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பலாம் 4. இணைப்பின் உள்ள கூகுள் படிவத்தில் கருத்துக்களை பகிரலாம் https://forms.gle/HjAtCWWD962KCg5L8

நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும், அடுத்த 30 நாட்களில், மேற்கண்ட ஏதாவது ஒரு வழிமுறையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறும் தங்களை மீண்டும் வேண்டுகிறேன். தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!!